பதிவு செய்த நாள்
23
ஜூன்
2023
11:06
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி சின்னாம்பட்டி வாராகிபுரத்தில் உள்ள வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆஷாட நவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவையொட்டி கடந்த ஜீன் 18 காப்பு கட்டுதல், மாலை சூடுதல், மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, அன்னதானம், நவகிரக ஹோமத்துடன் விழா தொடங்கியது. மறுநாள் மஹா வாராகி ஹோமம், சிறப்பு சங்கல்பம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அஸ்வாரூட வாராகி ஹோமம், மஹா பூர்ணாகுதி, தீபாராதனை சிறப்பு சங்கல்பம், சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது. விழாவில் நேற்று ஸ்ரீ வாராகி ஹோமம், பழங்களால் அலங்காரம் சிறப்பு சங்கல்பம் அர்ச்சனை, மஹா பூர்ணாகுதி தீபாரதனை பூஜைகளும் சிம்ஹாரூடா வாராகி ஹோமமும் நடந்தது. நாளை ஜுன் 23 விளக்கு பூஜை, காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் மறுநாள் கன்னிமார் பூஜை, மாவிளக்கு போடுதல். அம்பாள் ஊஞ்சல் உற்சவம் பூஜைகள் நடைபெறும். ஜூன் 26 சுமங்கலி பூஜை, உன்மத்த பைரவி ஹோமம் மறுநாள் தம்பதியினர் பூஜை, பக்தர்கள் பொங்கல் வைத்தல், மஹா வரசித்தி வாராகி மூல மந்திர ஹோமம். பட்டுப்புடவை அம்பாளுக்கு சமர்பித்தல், மஹா கலசாபிஷேகம் சிறப்பு அலங்காரம் இரவு வானவேடிக்கையுடன் அம்மன் ரத உற்சவம் நடைபெறும். ஜூன் 28 மஞ்சள் நீராடல், சாந்தி நிறைவு பூஜை சிவனடியார்களுக்கு வஸ்திர தானம் வழங்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வாராகி டிரஸ்டின் தலைவர் சஞ்சீவி சாமிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.