நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா; யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2023 11:06
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் துவக்கமாக நேற்று மாலை அங்கூர விநாயகர் கோயிலில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வு நடந்தது. நெல்லையப்பர் கோயில் ஆனி தேர்த் திருவிழா நாளை (24ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியாக நேற்று யானை பிடிமண் எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் காந்திமதி யானை முன் செல்ல, அஸ்திரதேவர் பல்லக்கில் வெளித்தெப்பம் அருகேயுள்ள அங்கூர விநாயகர் கோயிலில் எழுந்தருளினார். அங்கு பிடிமண் எடுத்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அஸ்திரதேவருடன் பிடிமண்ணை மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லக்கில் கோயில் யாகசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலிகா ஸ்தாபனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், உற்சவமூர்த்திகளுக்கு காப்பு கட்டும் வைபவம் நடந்தது. இன்று (23ம் தேதி) மாலை கொடிமரம், நந்தி, பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டு வைபவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.