நாகர்கோவில்: கடுக்கரை ஆற்றுப்பாரை சுடலை மாடசுவாமி கோவில் மண்டலாபிஷேக கொடை விழா நேற்று துவங்கியது. மேளம், தப் பட்டை மேளம், வில்லிசை, இரவு 10 மணிக்கு குடியழைப்பு தீபாராதனை நடந்தது. இன்று மஹா கணபதி ஹோமம், புனித நீர் மற்றும் அபிஷேக குடங்கள் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து இரவு மாபெரும் போட்டிமேளம், அலங்கார தீபாராதனை, ஊட்டுபடைத்தல் நடக்கிறது. மூன்றாம் நாளான நாளை காலை அலங்கார பூபடைப்பு, தீபாராதனை, மாலை வாழ்த்து பாடுதல் நடக்கிறது.