காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2023 05:06
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. வெங்கட ஜோதிர்மயி பிரதிபா அவர்கள் தனது குடும்பத்தினருடன் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களால் சிறப்பாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலர் கே.வி. சேகர் பாபு, கோவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி மூத்த சிவில் நீதிபதி பேபி ராணி, கூடுதல் இளநிலை சிவில் நீதிபதி கிருஷ்ணபிரியா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.