சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்று விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2023 03:06
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆணிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கோயில் நேற்று கொடியேற்று விழா நேற்று நடந்தது.
வெங்கடாஜலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையான கோயிலாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனி மாதம் 12 நாள் நடைபெறும் இவ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 3ல் நடைபெறுகிறது. சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தேர்வு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்வர். நேற்று காலை 9.30 மணி அளவில் நடந்த கொடியேற்று விழாவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. கோயில் அர்ச்சகர் சீனிவாச பெருமாள் தீப ஆராதனை செய்தார். பின்னர் வெங்கடாஜலபதி பூதேவி ஸ்ரீதேவி ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஆனித் திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அன்ன வாகனம் பல்லக்கு சப்பரம் சிறிய கருட வாகனம் பெரிய கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.