நபிகள் நாயகம் சிறு வயதில் அன்னை ஹலரத் ஹலிமாவிடம் வளர்ந்த காலம் அது. ஒருநாள் ஹலிமாவின் குழந்தைகளை காணாததால், அவரிடம், ‘‘அன்னையே. என் சகோதரர்களை காணவில்லையே. எங்கே சென்றுள்ளனர்’’ எனக்கேட்டார். ‘‘அவர்கள் காலை நேரத்தில் ஆடுகளை மேய்த்துவிட்டு, இரவில்தான் வீட்டிற்கு வருவார்கள்’’ என்றார். அதைக்கேட்டவர் அன்று யோசித்தபடியே துாங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவரும் மற்றவர்களோடு சேர்ந்து ஆடுகளை மேய்க்க கிளம்பினார்.