* சிவஅன்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நுால்கள் ஐந்து. திருவாசகம், திருக்குறள், திருமந்திரம், திருத்தொண்டர் தொகை, திருவருட்பா இவற்றில் முதன்மையானது திருவாசகம். * சிதம்பரம் என்னும் தில்லையில் சிவனடியாரான மாணிக்கவாசகர் சொல்ல சிவபெருமானே அந்தணர்வடிவம் தாங்கி வந்து அவரது கைகளால் எழுதப்பெற்ற திருநுால் இது. * சிவபெருமானுடைய பன்னிரெண்டு திருமுறைநுால்களுள் எட்டாவது திருமுறையாக அமையப்பெற்றது.