கல்வி, நீண்ட ஆயுள், கபடுஇல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான உத்தமகுணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை (அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் திருவடிமேல் வைக்கும் பக்தி, இந்தப் பதினாறும் இதற்கு அப்பால் உன் அடியார்களை என்றும் பிரியாத வரங்களை தர வேண்டும் அபிராமி தாயே என வேண்டி போற்றுகிறார்.