ஸ்டீபன் தோட்டத்தில் வளர்த்த ஆடு இரண்டு குட்டிகளை போட்டது. அடிக்கடி வேலியை தாண்டாதீங்க பிள்ளைகளா...பசி எடுத்தா தேவையான புற்களை சாப்பிட்டு இங்கே இருங்கள் என அறிவுரை சொன்னது தாய் ஆடு. தினந்தோறும் இதைக்கேட்டு எரிச்சல் அடைந்தது ஒரு குட்டிஆடு. அது ஒருநாள் அங்கு வந்த ஒநாயின் நயவஞ்சகப் பேச்சிற்கு மயங்கி வேலி தாண்டியது. இதை கவனித்த மற்றொரு ஆட்டுக்குட்டி தன் தாயிடம் போய் விபரத்தை சொல்ல அதற்குள் ஆட்டுக்குட்டியை இழுத்துச் சென்று காட்டிற்குள் ஓடியது ஓநாய். பெற்றோர் சொல்லும் வார்த்தைகளை கேளுங்கள். அதில் உண்மை மரணிக்காமல் இருக்கும்.