பதிவு செய்த நாள்
27
ஜூன்
2023
11:06
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூன் 28) நடக்கிறது.
தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் 2009 ல் நடந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில் நாளை காலை 9:35 மணி முதல் 10:35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை துவங்கியது. இன்று மதியம் 2:30 மணிக்கு சுவாமி ,பரிவார மூர்த்திகளுக்கு 108 கலச ஸ்நபன திருமஞ்சனம், மாலை 5:30 மணிக்கு நான்காம் கால வேள்வி நடக்கிறது. நாளை காலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி, 9:00மணிக்கு மகா கும்பங்கள் புறப்பாடுடன், சுந்தரராஜ பெருமாள் விமானம், பைரவர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், ஆஞ்சநேயர் சன்னதி விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் 3 ஏ.டி.எஸ்,பி., க்கள், 12 டி.எஸ்.பி., க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.