புதுச்சேரி : புதுச்சேரி, வைத்திக்குப்பம் அக்காசுவாமிகள் கோவிலில், நாராயண சுவாமிகள் சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில், 153வது மகா குருபூஜை பெருவிழா நேற்று முன்தினம் துவக்கியது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு அக்கா சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், 10:35 மணிக்கு சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. அமைச்சர் லட்சுமிநாரா யணன் உள்ளிட்ட ஏராளமான பத்கர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு அக்காசுவாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதி வழியாக உலா நடந்தது. நேற்று (26ம் தேதி) காலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணிக்கு நடராஜப் பெருமான் தரிசனம் நடைபெற்றது.