பதிவு செய்த நாள்
27
ஜூன்
2023
04:06
திருப்பதி: திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமிக்கு 3 டன் மலர்களால் புஷ்பயாகம் சிறப்பாக நடைபெற்றது.
திருமலை திருப்பதி பிரமோற்சவம் கடந்த மே 26ம் தேதி துவங்கி ஜூன் 3 வரை நடைபெற்றது. திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்ஸவம் முடிந்த பின் அதில் உள்ள குறைகளை களைய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று புஷ்பயாகம் நடந்தது. நேற்று காலை தேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு மல்லிகை, முல்லை, பல வண்ண ரோஜா, சம்பங்கி, ஜாதிமல்லி, சாமந்தி, இருவாட்சி, செண்பக பூ, பல வண்ண அரளி, கனகாம்பரம், மனோரஞ்சிதம், தாமரை, தாழம்பூ உள்ளிட்ட 3 டன் மலர்களால் புஷ்ப அர்ச்சனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.