ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 10:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவ செப்பு தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளை அனிரூத் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 7:15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயில் யானை ஜெயமால்யதா முன்செல்ல, நான்கு ரத வீதி சுற்றி வந்து சுமார் ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். டவுண் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.