பதிவு செய்த நாள்
28
ஜூன்
2023
01:06
கோவை : போத்தனூரிலுள்ள பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
போத்தனூரிலுள்ள அன்னை பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 25ல் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திருமண் சேகரித்தல் ஆகியவற்றுடன் துவங்கியது. 26ல் கணபதி, நவக்கிரக, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கா ஹோமங்கள். தீர்த்தங்கள், கடைவீதி முருகன் கோவிலிலிருந்து முளைபாலிகை அழைத்து வருதல், மஹா பூர்ணாகுதி, ஆகியவை நடந்தன. நேற்று பேச்சியம்மனுக்கு இரண்டாம் கா யாக பூஜைகள், பிம்ப சுத்தி, புதிய கொடி மரம் ஸ்தாபனம், திர்வ்யாகுதி, திருமுறை வழிபாடு, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. இன்று அதிகாலை நான்காம் கால யாகபூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், தீபாராதனை, ஸ்பர்ஸாகுதி, தீபாராதனை, மந்திர நன்நீர் கலசங்கள் கோவிலுக்கு எழுந்தருளல் நடந்தன. இதையடுத்து அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தசதான தசதரிசனம், மகாபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், உள்ளிட்டவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர். மாலை பேச்சியம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.