மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் உப சன்னதிகளுக்கு கும்பாபிஷேக பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2023 05:06
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உப சன்னதிகளுக்கு பாலாலயம் நடந்தது.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலும் ஒன்று. கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்திலும், 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 3-வது நிலையில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார். பல்வேறு சிறப்பு மிக்க திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படும், குடமுழுக்கு இதுவரை நடத்தாததால், பக்தர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப, 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கு தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோயில் முழுவதும் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகளுக்காக அரசு சார்பில் ஒரு கோடியே இருபது லட்சம் செலவில், மற்றும் பல பணிகள் உபயதாரர்கள் மூலமாகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உப சன்னதிகளுக்கு பாலாலயம் இன்று நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.