பதிவு செய்த நாள்
28
ஜூன்
2023
05:06
பொங்கலூர்: பொங்கலூர் உகாயனூர் ஊராட்சி சேமலை கவுண்டன் புதூரில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பொங்கலூர் உகாயனூர் ஊராட்சி சேமலை கவுண்டன் புதூரில் புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை, 27 ல் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியது. அன்று புன்யாக வாசனை, கணபதி ஹோமம் லட்சுமி கோபம் நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோபுர கலசம் வைத்தல், முளைப்பாரி, தீர்த்த கலச ஊர்வலம், ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, எந்திர ஸ்தாபனம் வைத்தல், கும்மியாட்டம் ஆகியன நடந்தது. நேற்று புதன்கிழமை கலசம் ஆலயம் வலம் வருதல், விமான கோபுரங்களுக்கும், சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் திரவிய அபிஷேகம் அலங்காரம் கோ பூஜை தசதானம் தச தரிசனம் மகா தீபாராதனை நடந்தது அன்னதானம் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவில் அர்ச்சகர் நடராஜ சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.