சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், 49வது சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானத்துடன் சிருங்கேரியில் அனுஷ்டிக்கிறார். ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது சிருங்கேரி சாரதா பீடம். சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியாக ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம் உள்ளார். சன்னியாசிகள் வாழ்வில் இரண்டு மாத கால சாதுர்மாஸ்ய விரதம் என்பது மிக முக்கியமானது. குரு பூர்ணிமா எனப்படும் ஜூலை 3ம் தேதி பவுர்ணமி அன்று வியாச பூஜை சாதுர்மாஸ்ய சங்கல்பத்துடன் விரதம் துவங்குகிறது. செப்., 29ல் நிறைவு பெறும் சாதுர்மாஸ்ய காலம் முழுவதும் வேறு எங்கும் செல்லாமல் ஒரே இடத்திலேயே தங்கி விரத நோன்பை கடைபிடிப்பது வழக்கம். இந்தாண்டு, மூன்று மாதங்கள் சாதுர்மாஸ்ய காலமாக அமைந்துள்ளது. இம்மாதங்களில் வரலட்சுமி விரதம் ஸ்ராவண சோமவார பூஜைகள்சுவர்ண கவுரிவிரதம் வரசித்தி விநாயகர் விரதம் போன்ற விழா மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் ஆக., 21ல்கருட பஞ்சமியில் ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானத்தின், 31வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. -- நமது நிருபர் -