சிதம்பரம் நடராஜர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2023 10:06
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி 28ம் தேதி உடன் முடிந்தது மேலும் கடந்த 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடராஜர் சன்னதியின் மேலே ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் கனக சபையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென உறுப்பினர் பிரச்சனை ஈடுபட்டதால் கடந்த மூன்று நாட்களாக நடராஜர் கோவிலில் அமலியாகவும் பரபரப்பாகவும் இருந்து வந்தது. ஒரு வழியாக நான்காம் நாள் இரவு ஏழு முப்பது மணிக்கு கடும் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இடையே திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மற்றும் சில அதிரடியாக ஒரு பக்கம் வழியாக கனக சபையில் சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கினார். இந்த நிலையில் நேற்று 28ஆம் தேதி மேலும் கடந்த நான்கு நாட்களாக நடராஜர் சன்னதிக்கு முன்பு தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் காலை பால் நிவேத்ய பூஜை முடிந்தவுடன் கோவில் தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு நடராஜர் சந்நிதி கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தெய்வத்தமிழ் பேரவையை சேர்ந்த சிவனடியார்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கனக சபையில் ஏரி நடராஜர் வழிபட்டு தேவாரம் திருவாசகம் பாடி வழிபட்டனர்.