மானாமதுரை: மானாமதுரை அருகே மானம்பாக்கி கிராமத்தில் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மானாமதுரை அருகே உள்ள மானம்பாக்கி கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன இதனைத் தொடர்ந்து தற்போது திருப்பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜை துவங்கி நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்காக புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் மேள, தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை மந்தையம்மன் இளைஞர் குழுவினர்,மானம் பாக்கி கிராம மக்கள் செய்திருந்தனர்.