காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2023 01:07
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளிநாட்டினரும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் .அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் கடந்த 15 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பணத்தை கணக்கிடும் பணியை கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முன்னிலையில் கணக்கிடப்பட்டது.அதில் ரொக்கப்பணமாக 1,07,28,040ரூபாய், தங்கம் 92.கிராம், வெள்ளி 1 கிலோ 200.கிராம், /வெளிநாட்டு பணம் யு.எஸ்.ஏ - 732 டாலர்கள், ஆஸ்திரேலியா - 5.டாலர்கள், மலேசியா - 51.ரிங்கிட்ஸ், சிங்கப்பூர் - 20. டாலர்கள், U.A.E - 1065. திர்ஹாம் இருந்ததாக கோவில் செயல் அலுவலர் வெங்கடேசு தெரிவித்தார்.