பதிவு செய்த நாள்
01
ஜூலை
2023
06:07
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு மகாநந்தியம் பெருமானுக்கு குடம், குடமாக சந்தன அபிஷேகம் நடந்தது.
ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கின்றன. அதேபோல் வளர்பிறையில் வரும் பிரதோஷம், தேய்பிறையில் வரும் பிரதோஷங்களுக்கு உரிய பலன்கள் இருக்கின்றன. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் விசேஷமானது. முக்கியமாக, சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், மகத்துவம் வாய்ந்தது என்பார்கள். சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷமான இன்று ( 01ம் தேதி) தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தியம்பெருமான், பெருவுடையார், பெரியநாயகி அம்பாளுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.