வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ராமையன்பட்டி முத்தாலம்மன் கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்து. முதல்நாள் கிராம கோயில்களில் பழம் வைத்தல் நிகிழ்ச்சியும், இரவு நையாண்டி மேளம், வானவேடிக்கையுடன் செமினிப்பட்டிக்கு சென்று முத்தாலம்மனை சிம்ம வாகனத்தில் பச்சை பட்டு, வெள்ளி கிரீடத்துடன், தீவட்டி தீபங்கள் ஏந்தி கிராமத்திற்கு அழைத்து வந்தனர். 2ம் நாள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். 3ம் நாள் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.