பரமக்குடி பெருமாள் கோயிலில் ஜேஸ்டாபிஷேகம்: கருட வாகனத்தில் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 03:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஸ்டாபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஜூன் 28 அன்று காலை மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்கு மண்டல அபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில் நேற்று காலை 9:30 மணிக்கு ஜேஸ்டாபிஷேகம் நடந்தது. அப்போது சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின்னர் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் இரவு 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் கருட வாகனத்தில் அருள் பாலித்தார். பின்னர் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.