கொடைக்கானலில் குருபூர்ணிமா விழா : பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2023 05:07
கொடைக்கானல்: கொடைக்கானல் சாய் சுருதியில் குருபூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது.
மனிதர்களுக்கு
ஆசானகவும் இறையாகவும் திகழும் குருவை போற்றி நன்றி கூறும் நாளான
குருபூர்ணிமா தினத்தன்று ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம் வருடா வருடம்
செய்யும் பொது சேவையாக இந்த ஆண்டும் 4500 நபர்களுக்கு கொடைக்கானலில்
அன்னதானமும் லட்டு பிரசாதமும் கம்பளியும் அளித்தது. தனியாக
குழந்தைகளுக்கு நோட் புத்தகங்களும் விளையாட்டு பொருட்களும் அளிக்கப்பட்டன.
மகிழ்ச்சி நன்றியுடன் பொது மக்கள் திரளாக வந்து பங்குபெற்றனர். விழாவில்
டி.வி.எஸ்., குழும தலைவர் வேணு சீனிவாசன், நிர்வாக இயக்குனர் சுதர்சன்
மற்றும் சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் கலந்து கொண்டனர்.