* நல்லொழுக்கம், நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டுவிடுபவன் அடுத்ததையும் விட்டுவிட வேண்டியதுவரும். * நேர்வழியில் செல்பவர்கள் பயப்பட அவசியமில்லை. துன்பப்படவும் மாட்டார்கள். * மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக இறைவன் அவர்களை உடனுக்குடன் பிடிப்பதாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்கமாட்டான். * வெறுமனே உண்ணாமலும் பருகாமலும் இருப்பதல்ல நோன்பு. தீமையான, மானக்கேடான செயல்களில் இருந்து விலகி இருப்பதாகும். * அண்டை வீட்டாருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துபவன் கல்நெஞ்சக்காரன். – பொன்மொழிகள்