சிறுமி டயனாவுக்கு நீண்ட நாள்களாக உயர்ரக செப்பல் வாங்க வேண்டும் என ஆசை. அதற்காக அதை தாயிடம் கேட்டு அடம்பிடித்தாள். சமாதானம் செய்து நாளை வாங்கி தருகிறேன் என சொன்னாள். மறுநாள் டயனாவை விருந்தினர் வீட்டிற்கு அழைத்து சென்றாள். அங்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சிறுவன் ஒருவனை பார்த்தாள். அவளிடம் பேசி விட்டு நகர்ந்த சிறுவன் சூம்பிய கால்களுடன் ஊர்ந்து சென்றான். வீட்டிற்கு வந்த அவள் தாயிடம் செப்பல் வாங்கி தாருங்கள் என கேட்பதை விட்டுவிட்டாள். காரணம் கேட்ட தாயிடம் சிறுவனை பற்றி சொன்னாள். புரிந்து கொண்ட மகளை வாரி அணைத்து கொண்டாள் தாய்.