தெரு வழியாக ஒரு பெரியவர் நடந்து வந்தார். அவரிடம் இளைஞர்கள் சிலர் மனம் ஒன்றி வழிபாட்டில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என கேட்டனர். அதற்கு அவர் தினசரி இந்த நான்கு செயல்களை கடைப்பிடியுங்கள் மனம் ஒருநிலைப்படும் என்றார். * அமைதியாக வழிபாட்டில் ஈடுபடுங்கள். * ஆலய வளாகத்தில் வயதானவர்களை பார்த்தால் மரியாதை செய்யுங்கள். * பிறருடன் வீண் பேச்சு பேசுவதை தவிருங்கள் * மற்றவர்கள் பின்பற்றும்படியாக உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.