Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் ... முனியப்ப சுவாமிக்கு பிளாஸ்டிக் சேர் : வினோத நேர்த்திக்கடன் முனியப்ப சுவாமிக்கு பிளாஸ்டிக் சேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று விவேகானந்தர் நினைவு நாள் : தேச முன்னேற்றத்திற்கு தோள் கொடுப்போம்!
எழுத்தின் அளவு:
இன்று விவேகானந்தர் நினைவு நாள் : தேச முன்னேற்றத்திற்கு தோள் கொடுப்போம்!

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2023
11:07

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் தத்தா.கல்லுாரியில் தத்துவம் பயின்றவர், இறைவன் குறித்த கேள்விகளுடன் சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்; அவரின் போதனைகளை கேட்டு, சீடரானார். ராமகிருஷ்ணரின் மரணத்திற்கு பின், இந்தியாவை உணர்ந்து கொள்ள, நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு, கன்னியாகுமரியில், கடல் நடுவே உள்ள பாறையில், மூன்று நாட்கள் தியானம் செய்தார்.கடந்த, 1893ல், அமெரிக்காவில் நடந்த, உலக மதங்களின் மாநாட்டில், ஹிந்து சார்பாக பங்கேற்றார். சிகாகோவில், அவர் உரையாற்றிய பின், ஹிந்து கருத்துகளுக்கு, உலக அரங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் நிறுவிய, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம், உலகம் முழுதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகின்றன. 1902 ஜூலை, 4ம் தேதி இறைவனடி சேர்ந்தார். வீரத்துறவி விவேகானந்தர் காலமான தினம் இன்று!

விவேகானந்தர் மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது: இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும்.

சுவாமி விவேகானந்தரின் தேச பக்திக்குள்ள ஓர் ஈடு இணையற்ற தனி சிறப்பு, அவருடைய ஆன்மிக அனுபூதியில் தான், மகத்தான தவ வலிமையில் தான் அடங்கியிருந்தது. அதனால் தான் அவரால் சமயம், சமுதாய துறைகளில் குறிப்பிடத்தக்க நிலையான ஒரு மறுமலர்ச்சியை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது. இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடத்தக்கவர்களாக நாம் பலரை சொல்ல முடியும். ஆனால் அவை இரண்டிலும் குறிப்பிடத்தக்கவர்களாக மகாத்மா காந்திஜியை போல ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். அவர்களில் விவேகானந்தருக்குதான் முதலிடம் உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்சி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாசார பாரம்பரியத்திற்கும், சேவை மனப்பான்மைக்கும் சிறந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் நடக்கும் மாசி சிவராத்திரி திருவிழாவுக்கு சுவாமி, அம்மன் வீதி உலாவின் ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா, மாசி மாதம் நடைபெறும். அதன்படி, ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம் மலவள்ளியின் மாரேஹள்ளியில் அமைந்து உள்ளது 1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ லட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar