பதிவு செய்த நாள்
04
ஜூலை
2023
11:07
கருமந்துறை: கல்வராயன்மலை கிராமத்தில், முனியப்ப சுவாமிக்கு, நேர்த்திக்கடனாக பிளாஸ்டிக் சேர்களை பக்தர்கள் வைத்து செல்லும் வினோதம் தொடர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்துாரை அடுத்த, கல்வராயன்மலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்கள் குல தெய்வமாக பெரியாண்டவர், கருப்பசாமி, முனியப்பன் சுவாமிகளை வழிபடுகின்றனர். கருமந்துறை, வெள்ளாறு கிராமத்தில், சேட்டு முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு வழிபாடு செய்யும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக, காணிக்கையாக, பிளாஸ்டிக் சேர்களை வைத்து செல்கின்றனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும், நுாற்றுக்கும் மேற்பட்ட சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் நாவலுார் பெரியாண்டவர், ஆவடியாறு சேத்துமலை பெரியாண்டவர் கோவில்களிலும் பிளாஸ்டிக் சேர்கள் வைத்து செல்லும் வினோாதம், பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து வெள்ளாறு மலைவாழ் மக்கள் கூறியதாவது: காவல் தெய்வமான சேட்டு முனியப்பனுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் சேர், நாற்காலிகளை காணிக்கையாக செலுத்தி வருகிறோம். சேட்டு முனியப்பன், நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பதாக நம்பிக்கை உள்ளது. இந்த சேர்களை மக்கள் எடுத்து செல்வதில்லை. இவ்வாறு கூறினர்.