கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோவில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 06:07
தேவகோட்டை: தேவகோட்டை அருகே தாழையூர் உசிலாயுடைய அய்யனார், கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடந்தது. இன்று இக்கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கண்டதேவி சந்திரசேகர குருக்கள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சுவாமி உசிலாயுடைய அய்யனார், கூத்தாடி முத்து பெரிய நாயகி அம்மனுக்கும் விநாயகர், கருப்பர் உட்பட பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்விக்க பெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி அம்மன் தரிசனம் செய்தனர்.