மயிலாடுதுறை மன்மத காருண்யேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 10:07
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மன்மத காருண்யேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை லால் பகதூர் சாஸ்திரி நகரில் மன்மத காருண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பழமையான இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கடந்த 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் தொடங்கியது. அன்று மாலை முதல்காலை யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோவில் விமானத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் இசைக்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.