காளஹஸ்தி சிவன் ருத்ர அபிஷேகத்தில் ஜெர்மனி பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 11:07
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளிநாட்டினரும் காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம் .இந்நிலையில் (இங்கு) தேவஸ்தானத்தில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைக்கு பக்தர்களிடையே மிகுந்த நம்பிக்கை இருப்பது போன்றே ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களும் சிறப்பு வாய்ந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர். அதிலும் மாலை 4 மணிக்கு நடக்கும் மஹன்யாச பூர்வக ருத்ர அபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு இடையே மிகுந்த நம்பிக்கை இருந்து வரும் நிலையில் நேற்று மாலை (புதன்கிழமை) நடந்த மகன்யாச பூர்வக ருத்ர அபிஷேகத்தில் ஜெர்மனி நாட்டுப் பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு கோயில் சார்பல் சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப் பட்டது.