திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2023 01:07
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில். இக்கோயிலின் கும்பாபிஷேக விழா 2003-ல் நடத்தப்பட்ட நிலையில் கும்பாபிஷக திருப்பணிகள் தொடங்க உள்ளன. இதற்கான பாலாலய பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் கால வேள்வி, நேற்று காலை 7:00 மணிக்கு 2ம் கால வேள்வி, பாலாலய பூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திருப்பணி வல்லுநர் குழுவினர் கொடிமரத்தினை ஆய்வு செய்து எடை அளவிடுதல் உள்ளிட்ட பணகளை மேற்கொண்டனர். அறநிலையத்துறை அனுமதிக்கு பின் ஒன்றன்பின் ஒன்றாக பணிகள் துவங்கும்.