தேவகோட்டை: கோட்டூர் நயினார்வயல் கிராமத்தில் முடியூரணி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாஹூதியை தொடர்ந்து காளியம்மன், முனீஸ்வரர், கருப்பருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.