பதிவு செய்த நாள்
07
ஜூலை
2023
03:07
திருவொற்றியூர், திருவொற்றியூர் - காலடிப்பேட்டையில், 16ம் நுாற்றாண்டில், கெலட் துரை என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 65 அடி உயர ராஜ கோபுரம் அமைக்கும் பணி, 1.5 கோடி ரூபாய் செலவில் துவங்கி நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிந்து, கோவிலின் மராமத்து பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதன்படி, ஆக., 20ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என, திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நேற்று, முகூர்த்த கால் நடும் வைபவம் நடந்தது. முகூர்த்தகால் மரத்தை, வேதமந்திரங்கள் முழங்க, பால், தயிர், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்தனர். பின், மாவிலை தோரணங்கள் கட்டி, கோபுர வாசலில் முகூர்த்த கால் நடப்பட்டது.