6,108 லட்டு அலங்காரத்தில் திருப்பந்தியூர் விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 03:07
திருப்பந்தியூர்: கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது, செல்வ விநாயகர் கோவில்.ஆனி மாத மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, 6,108 லட்டு அலங்கார தரிசனம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், நேற்று காலை 7:30 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வழித்துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.