பெரியகுளம்: பெரியகுளத்தில் தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வரர் கோயிலில் மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தென்கரை இந்திரன்புரித் தெருவில் தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்பனம், ரக்ஷா பந்தனம், இரண்டாம் கால யாகபூஜையை தொடர்ந்து நாடிசந்தன ஸ்பர்ஷாஹீதி, த்ரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, கோபூஜை, கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.