ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் கழிவு நீராக மாறும் அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 03:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புனித சீதா தீர்த்த கிணற்றை கோயில் நிர்வாகம் பராமரிக்காமல் விட்டதால், கழிவு நீராக மாறி கிடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட சீதா தீர்த்தம் கிணறு, துளசிபாபா மடம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளது. 15 ஆண்டுக்கு முன்பு இந்த தீர்த்தத்தை வட, தென் மாநில பக்தர்கள் பலரும் நீராடி செல்வது வழக்கம். காலப்போக்கில் இந்த தீர்த்த கிணற்றை கோயில் நிர்வாகம் பராமரிக்காமல் விட்டது. இதனால் தீர்த்த கிணற்றை சுற்றியுள்ள வியாபாரிகள் சிலர் குப்பைகளை கொட்டும் கிடங்காக மாற்றினர். இந்நிலையில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் தீர்த்தத்தை சுத்தம் செய்து சுற்றுச்சுவர் அமைத்தனர். இருப்பினும் தீர்த்தத்தை பக்தர்கள் நீராடும் வகையில் ஏற்பாடு செய்யாததால், பயன்பாடின்றி போனதால் தீர்த்தம் பச்சை நிறத்தில் கழிவு நீராக மாறிக் கிடக்கிறது. இதனைக் கண்டு பக்தர்கள் வேதனை அடைந்தனர்.