பதிவு செய்த நாள்
08
ஜூலை
2023
03:07
அனுப்பர்பாளையம்: திருப்பூர், திருநீலகண்டபுரம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், முருகன், துர்க்கை அம்மன், கோவில் மஹா கும்பாபிஷேக விழா நாளை 9 ந் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று 7 ந் தேதி காலை 6:00 மணிக்கு மக்கள் இசை, விநாயகர் வழிபாடு, கணபதி வேள்வி, மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாகம்,கோமாதா பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, 10 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, வாத்திய கோஷத்துடன் தீர்த்தம் மற்றும் முளைபாரிகை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், 300 க்கு மேற்பட்ட பெண்கள் முளைபாரிகை எடுத்து கொண்டு இளங்கோ நகர், திருநீலகண்டர் வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு, காப்பு கட்டுதல், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது. இன்று 8 ந் தேதி. காலை 9:00 மணிக்கு, மண்டப அர்ச்சனை, புதிய கோபுர கலசம் மற்றும் சாமிசிலைகளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு கோபுரத்தில் கலசம் வைத்தல், திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை மதியம் 1:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருநீலகண்டபுரம் பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.