கள்ளிக்குடி: திருமங்கலம் அருகே டி.அரசபட்டியில் பழைமை வாய்ந்த வெயில் உகந்த அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு 50 வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. கோவில் அக்கா அங்கயற்கன்னி, கள்ளிக்குடி அறநிலையத்துறை ஆய்வாளர் கலாவதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.