ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சபை சார்பில் சிவகாசி சாட்சியாபுரத்தில் 133 வது தவச உற்சவ பண்டிகை ஜூலை 6 முதல் துவங்கி 9ஆம் தேதி இரவு வரை நடக்கிறது. இந்த பண்டிகை துவக்கத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் இருந்து ஏராளமான சபை மக்கள் பாதயாத்திரையாக சாட்சியாபுரத்திற்கு புறப்பட்டு சென்றனர். சபை குரு பால் தினகரன் ஜெபித்து பாதயாத்திரையை துவக்கி வைத்தார். பாதயாத்திரை சென்றடைந்ததும் வட்டகை மன்ற தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் சிலுவை கொடியேற்றத்துடன் பண்டிகை துவங்கியது. ஏராளமான திருச்சபை மக்கள் பங்கேற்றனர்.