பதிவு செய்த நாள்
09
ஜூலை
2023
08:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப்பெருந் திருவிழா நாளை முதல் 10 நாட்கள் கோலாகலமாக நடக்க உள்ளது.
பெரியகுளம் கவுமாரியம்மன் ஆயிரம் கண்ணுடையாளாகவும், பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வேண்டியவரம் வழங்கி அருள் பாலிக்கிறார். ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில். தேனி மாவட்டத்தில் வீரபாண்டி மாரியம்மனுக்கு அடுத்தபடியாக திருவிழா காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். ஜூலை 4ல் சாட்டுதலுடன், கம்பம் நடப்பட்டது. நாளை (ஜூலை 10) கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. தினமும் அம்மன் குதிரை, ரிஷபம், சிம்மம், அன்னபட்சி, யானை, மின் ஒளி, பூ பல்லாக்கில் வீதி உலா வருவார் முக்கிய திருவிழாவான ஜூலை 18 மா விளக்கு உற்சவமும், மறுநாள் அக்கினிச்சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 25 மறுபூஜை பாலாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமதிலகம், பூஜாரிகள் முருகன், ராஜசேகர் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.