குலசேகரம்: குலசேகரம் ஷீரடி சாய்பாபா கோவிலில் 501 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. குலசேகரம் படநிலம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 9ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஷீரடி சாய்பாபா தரிசனம் சாய்கிருஷ்ணா கலையரங்கத்தில் நடந்தது. காலை சாய் பகவான் கோவிலிலிருந்து தாலப் பொலி மேள தாளத்துடன் கலையரங்கத்தில் எழுந்தருளல் நடந்தது. பின்னர் 501 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பஜனை , பஞ்ச முகஆரத்தி, அர்ச்சனை, கூட்டுபிரார்த்தனை, தியானம், அன்னதானம், புஷ்பாபிஷேகம், நைவேத்தியம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியினர் செய்திருந்தனர்.