Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் ... குலசேகரம் ஷீரடி சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம் குலசேகரம் ஷீரடி சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களின் தொன்மை குறித்த அறிவு இல்லை: முன்னாள் ஐ.ஜி., காட்டம்
எழுத்தின் அளவு:
கோவில்களின் தொன்மை குறித்த அறிவு இல்லை: முன்னாள் ஐ.ஜி., காட்டம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
10:07

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல், சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின், அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை அருளாளீஸ்வரர் கோவில் உள்ளது. ஓராண்டாக, அந்த பகுதியைச் சேர்ந்த சிவா சங்கீதா, கோவில் பற்றி தெரிவித்தார். இந்த கோவில் கருவறை, விமானம் ஆகியவை, தற்போது காப்பாற்றப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சுவர்கள், உள்ளே இருந்த கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன. அந்த கோவிலை பார்க்கும்போது, 15 லிருந்து 20 ஆண்டுகளில் இந்த பொக்கிஷம் மறைந்துவிடும்.உடனடியாக, இதை பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட கோவிலை கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். இந்த கோவிலை பொறுத்தவரை, தஞ்சை பெரிய உடையார் கோவில் கட்டுவதற்கு, 400 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கும். முற்கால சோழர்கள் காலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கலாம்.

இந்த கோவிலை புனரமைக்காமல் விட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த கோவிலுக்கான செயல் அலுவலர் ஓராண்டாக நியமிக்கப்படவில்லை. கோவில் தற்போது வியாபாரம் ஆகிவிட்டது. வசூல் அடிப்படையில் கோவில்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை அக்கறை கோவில்கள் மீது இருந்தால், அதன் தொன்மையை வைத்து பிரித்து இருக்க வேண்டும். அமைச்சருக்கு அக்கறை இல்லை என்பதை விட, அவருக்கு தொன்மை ரீதியாக அடிப்படை அறிவு கூட இல்லை என, தைரியமாக சொல்ல முடியும்.
தொன்மையாக இருக்கும் இந்த கோவிலை, இந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பிற துறைகள், மக்கள் வரிப்பணத்தால் இயங்குகிறது. ஆனால், ஹிந்து சமய அறநிலைத்துறை மட்டும் கோவில் சொத்துக்களாலேயே இயங்குகிறது. ஆயிரம் கோவில்கள் புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதில், 165க்கும் மேற்பட்ட கோவில்களை, பழமை மாறாமல் புனரமைக்க வேண்டிய சூழல் உள்ளது. தொல்லியல் துறைக்கு, 5 கோடி 3 கோடி என, நிதி ஒதுக்குகின்றனர். அதற்கு, 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். தமிழக கோவில்களில், 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் உள்ளன. 36 ஆயிரம் கோவில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் ... மேலும்
 
temple news
மதுரை; வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை விதித்துள்ளனர்.தமிழகம் ... மேலும்
 
temple news
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar