பதிவு செய்த நாள்
10
ஜூலை
2023
11:07
லக்னோ : உத்தர பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. மூன்று தளங்களை உடைய இந்தக் கோவில் 1,800 கோடி ரூபாய் செலவில் எழுப்பப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் கோவில் திறக்கப்பட உள்ளதால், இரவு பகலாக நடக்கும் கட்டுமான பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில், கருவறை கட்டும் பணிகள், டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என, தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோயில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமானம் குறித்து, ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியுள்ளதாவது: ராஜஸ்தானின் பன்சி பாஹர்பூரில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, நடந்து வரும் கோயில் கருவறை கட்டும் பணிகள், டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். தற்போது, கோயிலின் முதல் தளம் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரிக்குள், கோயில் கட்டும் பணிகள் முழுதுமாக முடிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.