தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரை என்ற மனைவியர். இதில் ராமனின் தாயான கோசலையும், பரதனின் தாயான கைகேயியும் பட்டாபிஷேகம் குறித்த விஷயத்தில் நேரடியாகப் பங்கேற்றனர். சுமித்ரையோ, ராமனுக்கு பட்டம் என்ற போதும், பரதனுக்குப் பட்டம் என்றபோதும் சலனம் இல்லாமல் ஞானி போல இருந்தாள். தன் பிள்ளைகள் இருவரில் லட்சுமணனை ராமனுக்கு உதவியாகவும், பரதனுக்கு உதவியாக சத்ருக்கனனையும் அனுப்பி வைத்தாள். லட்சுமணனிடம், மகனே! ராமனுக்கு தம்பி என்ற உரிமையுடன் நீ அவனுடன் பழகாதே. ஒரு வேலைக்காரனைப் போல இரு, என்று அறிவுரை கூறினாள். பட்டமகிஷிகள் மூவரில் சுமித்ரையே தெய்வத்தன்மை மிக்கவளாக திகழ்கிறாள். அவள் லட்சுமணனை ராமனுடன் அனுப்பாத பட்சத்தில் அவர் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார். அதனால் அவள் தெய்வத்தாயாக விளங்குகிறாள்.