குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் கோபுரத்தில் வளர்ந்த மரக்கன்றுகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 01:07
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முறையான பராமரிப்பு இல்லாததால், பிரதான ராஜகோபுரத்தில் ஆங்காங்கே அரச மரக்கன்றுகள் வளர்ந்து இருந்தன. இந்த மரக்கன்றுகள் வளர்வதால், ஏற்படும் பாதிப்பு குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், குமரக்கோட்டம் ராஜகோபுரத்தில் வளர்ந்திருந்த மரக்கன்றுகள் அகற்றப்பட்டன.