குண்டும் குழியுமான பெரியகுளம் ரோடு கவுமாரியம்மன் வீதி உலா சிரமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 05:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனிப் பெருந்திருவிழா அம்மன் வீதி உலா செல்லும் ரோட்டில் பேட்ச் ஒர்க் செய்து தரும்படி ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளது.
பெரியகுளத்தில் கவுமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் அம்மன் சிம்மம், குதிரை, ரிஷபம், யானை, அன்னபட்சி உட்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். பெரியகுளம் மூன்றாந்தல் இணைப்பு ரோடு பகுதியில் துவங்கும் தெற்குதெரு 200 மீட்டருக்கு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்தப் பகுதியில் வீதி உலா வரும்போது அம்மனை வைத்து டிராக்டர் ஓட்டிச் செல்லும் டிரைவர்கள், அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள், மண்டபடிதாரர்கள் உட்பட பலரும் இந்த ரோட்டை கடந்து செல்லும்போது சிரமப்படுகின்றனர். மழை காலம் என்றால் அவஸ்தை அதிகரிக்கிறது. நகராட்சி கவனத்திற்கு: திருவிழா நடந்து வருவதால் ரோட்டில் பள்ளங்களில் பேட்ஜ் ஒர்க் மண் மேவி தற்காலிக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.