குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 05:07
ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 9ம்தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவான ஆனிப்பெருந்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில் நேற்று காலை மங்கலஇசை கிளாரினெட் இன்னிசை ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி, மதியம் சிறப்பு பூஜை, அன்னதானம், பக்தி இசை, மாலையில் பட்டிமன்றம், பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் மற்றும் இரவு1 மணிக்கு ஆனி பெரும் திருவிழா சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து நாராயணசுவாமி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவையொட்டி நேற்று முதல் வரும்18ம்தேதி வரைமுத்துமாலை அம்மன் தங்கத் திருமேனியில் விசேஷ அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். 18ம்தேதி 8ம் கொடை விழா நடக்கிறது. விழாவில் நேற்று தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் வந்தவாகனங்கள் நிறுத்தஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் செய்துள்ளனர்.