ஆடித்திருக்கல்யாணம் விழா : நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 05:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (ஜூலை 13) ஆடித் திருக்கல்யாண திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி, ஆடி திருக்கல்யாணம் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆடித் திருக்கல்யாணம் விழாவுக்கு பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் காலை 10:30 மணிக்கு மேல் கோயில் குருக்கள் திருவிழா கோடி ஏற்ற உள்ளனர். இதனைத்தொடர்ந்து கோயிலில் ஜூலை 17ல் ஆடி அமாவாசை அன்று ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தல், ஜூலை 21ல் கோயில் ரதவீதியில் ஆடித் தேரோட்டம், ஜூலை 24ல் சுவாமி, அம்மனுக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஆடித் திருக்கல்யாணம் விழாவும், ஜூலை 29ல் சுவாமி, அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டபடியில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.